எதற்காக இந்த fea அனாலிசிஸ்

தமிழ்பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

linking abaqus 2019 with fortran

hi abaqus students.எதற்காக fea அனாலிசிஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதினை எனது புரிதலுக்கு ஏற்ப உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

abaqus for linux

உதாரணமாக நீங்கள் ஒரு chair உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை நிறுவ விரும்புகின்றிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் இதுவரை மார்க்கெட்டில் இல்லாத chair மாடலை உருவாக்க விரும்புவீர்கள் மேலும் உற்பத்தி செய்யவேண்டிய அந்த chair ன் quality மற்றும் life time ஐ கருத்தில் கொள்வீர்கள்.

முதற்கட்டமாக chair manufacturing method தேர்வுசெய்விர்கள் பின்னர் chair க்கான design ஐ உருவாக்குவீர்கள்,அதன் பின்னர் chair ன் quality ஐ அறிவதற்காக ஆரம்பக்கட்டமாக ஒரே design ல் A, B ,C, என்ற மூன்று வகையான chair க்களை உருவாக்குவதாகக்கொள்வோம், A என்ற chair ஆனது 5 mm தடிமனிலும்(thickness) B என்ற chair ஆனது 10 mm தடிமனிலும்(thickness) C என்ற chair ஆனது 15 mm தடிமனிலும்(thickness) தயாரிக்கப்படுகிறது.


A,B,C என்ற மூன்று chair களும் முறையே 10kg,20kg,30kg என்று சீராக எடையை உயர்த்தி chair ன் மீது எடை ஆனது செலுத்தப்பட்டு மூன்று chair களும் எந்த எடையில் உடைகின்றது என்று பரிசோதிக்கப்பட்டு கணக்கிடப்படுகின்றது.

A என்ற chair ஆனது 50kg யிலும், B என்ற chair ஆனது 100kg யிலும், C என்ற chair ஆனது 150kg யிலும் உடைகின்றதாக வைத்துக்கொள்வோம்,

சராசரி மனிதனின் எடை 70kg என்று வைத்துக்கொண்டால் 50kg வரைமட்டுமே தாங்கக்கூடிய 5mm தடிமன் கொண்ட A என்ற chair ஐ தயாரிப்பதில் பயனில்லை மேலும் சராசரி மனிதர்கள் யாரும் 150kg வரை இருக்கப்போவதில்லை அதனால் 15mm தடிமன் கொண்ட 150kg வரை சுமக்கும் C என்ற chair ஐ தயாரிக்கவேண்டாம்,

அதனால் சராசரி மனிதனின் எடை 70kg மற்றும் கூடுதலாக 30kg வரை சுமக்கும் 10mm தடிமன் கொண்ட 100kg வரை சுமக்கும் B என்ற chair ஐ தேர்ந்தெடுத்து தயாரித்தால் போதுமானது.

இதன் பயன்கள் என்னவென்று கேட்டால் A என்ற chair ஐ நிராகரிப்பதன் மூலம் நிறுவனத்தின் product quality அதிகரிக்கும். C என்ற chair ஐ நிராகரிப்பதன் மூலம் C என்ற அதிக தடிமன் கொண்ட chair க்கு பயன்படுத்தப்பட்டுவந்த material ஆனது சேமிக்கப்பட்டு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும்.

இந்த சோதனையை நாமே எளிதாக சொல்லிவிட்டு போயிடலாமே,அல்லது நேரடியாகவே இந்த சோதனையை செய்துவிடலாமே,இது அனைவரும் அறிந்ததுதானே இதில் fea analysis பயன் எங்கு உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம் .

அவ்வாறு நினைக்கும் முன் நீங்கள் சிலவற்றை கருத்தில்கொள்ளவேண்டும்,முதலாக மூன்று chair களும் தயாரிக்க தேவைப்படும் raw material க்கான பணம் ,இரண்டாவதாக machining செய்வதால் ஏற்படும் current bill போன்ற செலவினம் ,அடுத்ததாக manufacturing செய்யும் labour salary போன்றவற்றை கருத்தில்கொள்ளவேண்டும்.

மேற்கண்டவற்றை கருத்தில் கொள்ளும்போது fea analysis ஆனது பயனுள்ளதாக இருக்கும். மேலும் தற்போது உற்பத்தியிலுள்ள product ன் weak position ஐ கண்டறிந்து அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேலும் மெருகேற்றலாம்.


மற்றும் மூன்று வகையான chair களும் மூன்று வகையான material களில் தயாரிக்கப்படுவதாக எடுத்துக்கொள்வோம்,உதாரணமாக A என்ற chair ஆனது cast iron என்ற material ளிலும், B என்ற chair ஆனது plastic என்ற material ளிலும், C என்ற chair ஆனது glass என்ற material ளிலும் தயாரிக்கப்படுவதாகக்கொள்வோம்,இந்த மூன்று வகையான material களால் ஆனா மூன்று chair களையும் fea analysis செய்தால் தடிமன் 5mm மட்டுமே கொண்ட A என்ற chair ஆனது மற்ற இரண்டு chair களை காட்டிலும் வலிமை கூடுதலாக இருக்கலாம்,மேலே குறிப்பிட்ட material களின் raw material க்கான current market price ஐ பொறுத்து A,B,C என்ற மூன்று chair களில் தகுந்ததை தேர்ந்தெடுத்து அவற்றை மட்டும் உற்பத்தி செய்யலாம்.

getintopc abaqus

அதுமட்டுமல்லாமல் aeroplane,கப்பல் போன்ற மிக்பெரிய அமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் தங்களது புதிய desing model idea க்களை நடைமுறையில் உருவாக்கி சோதனை செய்வது என்பது நடவதாகரியம்.இது போன்ற துறைகளில் தங்களது design ஐ fea analysis செய்வதன்முலம் air flow போன்றவை தங்களது புதிய desing model களான aeroplane,கப்பல் போன்றவற்றில் ஏற்படுத்தும் impact போன்றவற்றை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் kinetic மெக்கானிசம்,rotary மெக்கானிசம் போன்றவற்றில் மாறுபாடுகளை மேற்கொள்ள நினைத்தால் புதிய மாறுபாடுகள் சரிவர இயங்குமா என்று fea analysis மூலம் சோதிக்கலாம்.மேலும் இதுபோன்ற புதிய idea க்களை சோதனை செய்து பார்க்க fea analysis மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தற்போது fea analysis இல் abaqus,ansys,hypermesh,solidworks போன்ற software கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

Comments