abaqus friction stir spot welding (fssw)

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள். நாம் இந்த பதிவில் abaqus software ல் friction stir spot welding-fssw ஐ எவ்வாறு செய்வதென்று பார்ப்போம். fssw என்பது இரண்டு உலோக தகடுகளை ஒன்றின் மீது ஒன்றை வைத்து அவை இரண்டின் மீதும் உராய்வின் காரணமாக வெப்பத்தை குறிப்பிட்ட மேற்பரப்பின் மீது மட்டும் ஏற்படுத்தி இரண்டு உலோக தகட்டுக்கல்லுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதாகும்.அதாவது உருளை வடிவ tool ஆனது அதிக வேகத்தில் மேலே உள்ள உலோக தகட்டின் மேற்பரப்பில் சுழல செய்யும்.இதனால் மேலே உள்ள உலோக தகட்டின் மேற்பரப்பில் heat generate ஆகும். இவ்வாறு டூல் ஆனது சுழன்று கொண்டே மேலேயிருந்து கீழ் நோக்கி மெதுவாக நகரும்.இதனால் மேலே உள்ள உலோக தகட்டின் மேற்பரப்பில் உருவான heat ஆனது கீழே உள்ள உலோக தகட்டிற்கும் பரவும்.இவ்வாறு உருவான வெப்பத்தினால் உலோக தகடுகள் இரண்டும் மெல்லமெல்ல உருக தொடங்கும். இவ்வாறு குறிப்பிட்ட பகுதியில் இரண்டு உலோகங்களும் உருகத்தொடங்கவும் இரண்டு உலோகங்களுக்கும் இடையே இணைப்பு ஏற்படும்.இந்த செயல்முறை முடிந்தவுடன் இரண்டு உலோகத்தட்டுகளுக்கும் இடையே குறிப்பிட்ட பகுதியில் ஏற்ப...