ஒரு கத சொல்லட்டுமா சார்-chapter 1

இடம்:சென்னை,இந்தியா

year:2023

இந்த கதையின் தொடக்கத்தில் சாதாரண பொதுமக்களின்(1 lack people randomly) வங்கிக் கணக்குகளில் இருந்து 1rs எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் அவர்களின் செல்போன் க்கு வருகிறது.பாங்க்கிலிருந்து அந்த 1rs கட்டணத்திற்க்காக எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

சரி நம் கதையின் நாயகன் ராமிடம் செல்வோம்.ராம் ஒரு காவல்துறை அதிகாரி(si)age 27.

அன்று மழைக்காலம் மழை பெய்து நின்று இதமான சாரல் இருந்தது.ராம் தனது வீட்டில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொது chennai cheppakkam ல் ஒரு வீட்டில் பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ராம் க்கு செய்தி வருகிறது.எனவே ராம் சம்பவம் நடந்த வீட்டிற்க்கு தனது bike ஐ எடுத்துக்கொண்டு செல்கிறான்.

அங்கு ஏற்கனவே தனது ஜூனியர் ஆஃபீசர் ஐ அனுப்பி கைரேகை தடையங்களை சேகரிக்க சொல்லிருந்தான்.ராம் அங்கு சென்றவுடன் நைட் மழையால் ஏற்பட்ட பவர் cut ஆஹ் use பண்ணி நைட் வீட்டுல யாரும் இல்லங்குறத தெரிஞ்சிக்கிட்டு திருடிருக்கனுங்க சார் என்று ராமிடம் ஒரு போலீஸ் சொன்னார். ராம் அங்கு அந்தவீட்டின் உரிமையாளரிடம் எவளவு பணம்,நகைகள் காணவில்லை என்பதை கேட்டு அறிகிறான்.தனது ஜூனியர் ஆஃபீசரிடம் அருகில் உள்ள cctv கேமராவை check பண்ணி யாரும் சந்தேகிக்கும் படி வந்தார்களா என்பதை பார்க்கச்சொல்கிறான்.

ராம் அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரிக்க வேண்டும் என எண்ணி அருகில் உள்ள வீட்டிற்க்கு செல்கிறான். அங்கு வித்யா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் தனது கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கிறான்.அந்த பெண்ணும் அவன் கேள்விகளுக்கு பதிலத்துக்கொண்டிருக்கும்போது வீட்டின் உள்ளிருந்து ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டகிறது (அம்மா எனக்கு பேங்க் க்கு லேட் அக்கிருருச்சு அங்க யாருகிட்ட தேவையில்லாமல் பேசிக்கிட்டு இருக்க ?).

இதை கேட்டு serious விசாரித்துக்கொண்டிருக்கும் ராம் க்கு சற்று கோவம் வந்தது. உடனே ராம் கொள்ளையடித்த பணத்தை பேங்க் ல் போடா போகிறீர்களா என்கிறான்.

உடனே வித்யாவும் அது எனது மகள் ஜனனி adyar பேங்க் ல் வேலை பார்க்கிறாள் என்கிறாள். (வித்யா பதட்டம் அடைந்ததை கண்டு சிரிக்கிறான்) உனது மகள் ஜனனி ஐ கூப்பிடுங்கள் அவரிடமும் விசாரிக்க வேண்டும் என்கிறான். அதைக்கேட்ட ஜனனி வீட்டலிருந்து வெளியே வந்து தனது scooty ஐ ஸ்டார்ட் செய்ய முயற்ச்சி செய்துகொண்டே எனக்கு இப்ப time இல்ல வேணும்னா ஈவினிங் வாங்க உங்க questions க்கு answer பண்றன் என்கிறாள்.

(ஒரு போலீசிடம் இவளவு தைரியமாக பேசும் ஜனனியை பார்த்தவுடன் ராமுக்கு பிடித்து விட்டது) வெகுநேரம் முயற்சித்தும் அவளது scooty ஸ்டார்ட் ஆகவில்லை. ஜனனி scooty ஐ திட்டியபடியே பஸ் ஏறி செல்ல நடக்க தொடங்கினாள்.

ராம் நானும் அடுத்து அடையாறு தான் போறேன் என்கூட வாங்க உங்கள bank ல drob பன்னிடுறேன் என்கிறான். அதற்க்கு ஜனனி இல்ல நீங்க உங்க வேலையை பாருங்க என்கிறாள்.

அதற்க்கு ராம் எனது வேலைக்காக தான் உன்னை அழைச்சுக்கிட்டு போக நினைக்கிறேன்,போகும் வழியில் எனது கேள்விகளை உன்னிடம் கேட்டு விடுவேன் இல்லை என்றால் நான் மீண்டும் இங்கு வரவேண்டி இருக்கும் என்றான்.

உடனே ஜனனி வேண்டாவெறுப்பா அவனுடன் செல்ல அனுமதிக்கிறாள்.

இருவரும் பைக் ல் ஏறி செல்ல தொடங்கின்றன.

ராம் தனது கேள்விகளை ஜனனியிடம் அடுக்க தொடங்கினான்.

உனது பெயர் என்ன ?

நீங்க இந்த area வுக்கு வந்து எத்தனை வருசமாச்சி?

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரை உனக்கு தெரியுமா ?

கடந்த ஒரு வாரமா இந்த ஏரியா ல யாரும் சந்தேகபடும்படி வந்தங்ககளை ?

ராம் ன் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்த ஜனனி ராம் அயராத கேள்விகளால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தால். இதனால் ஜனனி ராம் இடம் தங்கததான கொள்ளையர்கள் எடுத்துக்கிட்டு போனாங்க அவங்க உயிரையா எடுத்துக்கிட்டு போனாங்க என்றாள்.

தங்கம் தான என்றான் ராம்.

என்ன நீ bank வேலைபார்த்துக்கிட்டு இவ்ளோ சாதாரணமா இத எடுத்துகிற என்றான் ராம்.

ஒரு குடும்பத்தோட பொருளாதாரநிலையை சிதைப்பது அந்த குடும்பத்தோட அடுத்த தலைமுறை க்கு நாம் செய்யும் துரோகம்.பொருளாதார சமநிலை அற்ற தன்மை குற்றங்களை அதிகரிக்கும் என்றான் ராம்.

என்று கூறிய ராம் தனது சிறுவயது நிகழ்வு ஒன்றை சொல்ல தொடங்கினான்.

(year 2007)
எங்க ஊரு பட்டுக்கோட்டை பக்கத்துல சின்ன கிராமம். தென்னை மரங்கள் நிறைந்த பசுமையான பூமி.

நா government ஸ்கூல்ல 7th படிச்சுக்கிட்டு இருந்தேன்.

எங்க அப்பா செல்வம் cnc lathe operator,மாசம் 8000 சம்பளம்.எங்க அம்மா பத்ம வீட்டுவேலையும் பாத்துகிட்டு விவசாய வேலைக்கும் போவாங்க.அப்புறம் என் தம்பி தேவ்.நாங்க ரெண்டுபேரும் ட்வின்ஸ்.ரெண்டு பேரும் பாக்குறதுக்கு ஒரே மாதிரி இருப்போம்.ஒரு நோர்மல் middle கிளாஸ் பேமிலி.

என்தம்பி தேவ் சூப்பர் intellegent kid.நல்ல படிப்பான் எதுவா இருந்தாலும் சீக்கிரம் கத்துக்குவான்.A B C D யாகூட தலைகீழா சொல்லுவான் .நான் sports person,நா நீச்சல் போட்டியில் வின் பண்ண அவன் chess award வின் பண்ணுவான்.

பெருசா காசு இல்லனாலும் நிம்மதியான வாழ்க்கை.

ஆனா நிம்மதியா வாழ்க்கைக்கு காசும் ரொம்ப அவசியம் னு சொல்லற மாதிரி சில கசப்பான சம்பவங்களும் எங்க வாழ்க்கைல வாரும்.அதுல ஒன்னு எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு பணக்கார வீட்டுப்பையன் ashok இருந்தான்.அவன் வீட்டுக்கு தான் டிவி பாக்க போவோம். அந்த காலத்துல எல்லாம் மொத்த ஊருளையே ரெண்டு வீட்டுலதான் டிவி இருக்கும்.

அன்னைக்கு அசோக் வீட்டுல டிவி பாத்துகிட்டு இருந்தப்ப அசோக் அம்மா டிவி யா off பண்ணிட்டு எங்களை வெளிய போக சொல்லிட்டாங்க.இது அடிக்கடி அங்க நடக்கும்.ரொம்ப கஷ்ட்டமா இருக்கும்.

வீட்டுக்கு வந்த என்னோட தம்பி dev அம்மாகிட்ட அங்க நடந்தத சொல்லி நம்ம வீட்டிக்கு டிவி வாங்க சொன்னான். அதற்க்கு அம்மா பத்ம அதுக்கு மொதல்ல நம்ம வீட்டுல current (electricity)இருக்கணும் னு சொல்லி சிரித்தாள். அதற்க்கு dev நீங்க நான் எதுகேட்டு எனக்காக வாங்கித்தந்திருக்கிங்க ரொம்ப நாளா ஸ்கூல் போறதுக்கு சைக்கிள் வாங்கி கேட்டுகிட்டு இருக்கோம் அதுவும் வாங்கித்தர்ற மாட்டிக்கிறீங்க என்றான்.

நான் ஒரு விசயத்திற்கு ஆசைப்பட்டு கிடைக்கவில்லை என்றால் குடும்ப நிலை கருதி அது நமக்கு கிடைக்கப்போவதில்லை என்று அந்த விஷயத்தை கடந்து சென்றுவிடுவேன். ஆனால் என் தம்பி அப்படி இல்லை.

அன்று ஸ்கூல் முடிஞ்சி நானும் தேவும் வீட்டுக்கு வந்தோம்.அம்மா வீட்டு வாசலில் வெயில் ல காயவெச்சிருந்த வடகத்தையெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தாங்க.வீட்டுக்கு வந்ததும் ஸ்கூல் bag ஆஹ் தூக்கி வீட்டின் ஒரு மூலையில் எறிந்துவிட்டு நா எனது பம்பரத்தை எடுத்தேன்.தேவ் ஐ விளையாட அழைச்சேன் அதுக்கு அவன் எனக்கு வேல இருக்கு நீ போ என்றான்.இருவரும் ஒரே வகுப்பு படிக்கிறதால சரி நீ homework முடிச்சி வை நா வந்து உன்னோடத பாத்து எழுதிகிர்றேன் னு சொல்லிட்டு நா விளையாட போயிட்டேன்.

விளையாட போனஇடத்துல பசங்க எல்லாரும் அசோக் தோப்புல பொன்வண்டு இருக்கு இன்னைக்கு பொன்வண்டு புடிக்க போவோம் னு சொன்னாங்க. நானும் சரினு பொன்வண்டு புடிக்கலாம்னு கிளம்பிட்டேன்.போறவழியெல்லாம் மயில்தோகை கெடந்துச்சு அதையும் எடுக்கிட்டு பொன்வண்டு இருக்குற மரத்துக்கு வந்தோம்.எனக்கு மரம் ஏற தெரியும்ங்குறதால பசங்க எல்லாரும் என்னைய ஏறி பொன்வண்டு புடிக்க சொன்னாங்க.நானு ஏறி புடிச்சுக்கொடுத்தேன்.எனக்கும் ஒரு பொன்வண்டு புடிச்சுகிட்டு அது சாப்பிடுறதுக்கு ஒரு சின்ன மரக்கிளையும் ஓடிச்சிகிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.வரும்வழியில் அசோக்கோடா கிணறு இருந்தது அதுல எல்லாரும் குதிச்சி குளிச்சோம்.

குளிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் மயில் தொகையையும் அந்த மரக்கிளையையும் வீட்டின் கூரையில் சொருகினேன்.பொன்வண்டை ஒரு நூலால் கட்டி அந்த மரக்கிளையில் விட்டேன்.

எனக்கு பசிக்க ஆரபிச்சிச்சி,ரெண்டு நாளுக்கு முன்னாடி அரிசி தவலை ல (அரிசி பானை )ரெண்டுநாள் முன்னாடி சீதா பழம் பழுக்க வச்சது ஞாபகம் வந்துச்சி.உடனே அந்த அரிசி தவலைய தொறந்து பாத்தேன் ரெண்டு சீதா பழத்தையும் காணாம்.என்னோட தம்பியையும் காணாம். தம்பி தான் எடுத்துருப்பானு எனக்கு தெரியும்.

எங்க வீட்டு வாசல்ல ஒரு மாமரம் இருக்கும் அதுல அம்மா புடவைல ஊஞ்சல் கட்டி இருப்போம்.சரினு அந்த மாமரத்துல இருக்குற மங்கவ பறிச்சி உப்பு வச்சி அந்த ஊஞ்சல் லேயே உக்காந்து திங்க ஆரம்பிச்சேன்.

பொழுது இருட்ட ஆரம்பிச்சிச்சி அம்மா வீட்டுக்குள்ள விளக்கு கொளுத்தி வச்சிட்டு வீட்டு வாசல்ல விளக்கு கொளுத்தி வைக்க வந்தாங்க.

நா மங்கா தின்னுகிட்டு இருக்குறத பாத்து நைட் மங்கா அதிகம் திங்காத வயித்த வலிக்கும் னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயி சமைக்க ஆரம்பிச்சாங்க.

வேலை முடிச்சிட்டு அப்பா வீட்டுக்கு வந்தாங்க.அப்பாவும் அம்மாவும் வீட்டின் இரும்பு பிராவுக்கு பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க. அப்பா அம்மாவுக்கு ஒரு கோல்ட் chain வாங்கி வந்தார்.அம்மா பத்ம இப்ப எனக்கு எதுக்கு கோல்ட் chain னு கேட்டாங்க. அதற்க்கு அப்பா உனக்காக இல்ல நம்ம பசங்களுக்கான சேமிப்பு.இன்னும் கொஞ்ச வருசத்துல கோல்ட் ரேட் எங்க போகுது னு மட்டும் பாரு என்றார்.அவங்க காலேஜ் படிக்கும்போது இத வித்து காலேஜ் fees கட்டலாம் னு சொன்னாரு.

தேவ் வீட்டுக்கு வந்தான்,அவனும் அந்த ஊஞ்சலில் வந்து படுத்தான். அவன் புதுசா ஒரு walkman ஒன்னு வச்சிருந்தான்.நான் அவனிடம் எதுடா இது ?இது அசோக் கோடாது தான திருடிட்டியா என கேட்டேன்?

அதற்க்கு தேவ் ஆமா டா அசோக் கோடாது தான் அவன்கிட்ட இருந்து திருட்டிட்டேன் என்றான். நான் இது ரொம்ப தப்பு டா என்றேன்.

அதற்க்கு தேவ் இதுல என்ன தப்பு இருக்கு.நம்ம அப்பா கிட்ட இத வாங்கி கேட்ட கண்டிப்ப வாங்கி தரமாட்டாரு.நமக்கு வேண்டியது நமக்கு கெடைக்கலான நாம அத எடுத்துகிறதுல எந்த தப்பும் இல்ல என்றான்.

நான் அவனிடம் விளையாட்டுக்கு திருடினது தான் திருடின அவங்க விட்டு டிவி யையும் திருட வேண்டியது தானே என்றேன். அதற்க்கு தேவ் டிவி யை திருடுனால் நா மாட்டிக்குவேன் என்றான் .

இத திருடுன மட்டும் மாட்டிக்கிடமாட்டாயா என்று எங்களுக்கு பின்னாடி ல் இருந்து ஒரு குரல் கேட்டது.


திரும்பி பார்த்தால் அப்பா நின்று கொண்டிருந்தார்.


அப்பா தேவ் அறைந்து என்னடா திருட்டு பழக்கம் எல்லாம்.ஒழுங்கா இத நாளை காலையில் அசோக் இடம் கொடுத்துவிடு என்றார். தேவ் அழுதான்,இல்ல இத நான் கொடுக்க மாட்டேன்,நீயும் வாங்கித்தர மாட்ட நா எடுத்திக்கிட்டாலும் திருப்பிக்கொடுக்க சொல்ற,எனக்கு புடிச்சத வாங்கிக்கொடுக்க முடியலைன்னா எதுக்காக என்னைய பெத்த என்றான்.அதற்க்கு அப்பா நாங்க ஒரு புள்ள போதும் னு தாண்ட இருந்தோம் நீயா தாண்ட ஒட்டிக்கிட்டு வந்து பொறந்த என்றார்.

இத கேட்ட என்தம்பி தேவ் மேலும் அழுதான்.

இத பார்த்த அம்மா அந்த கோல்ட் செயின் ஐ அப்பாவிடம் கொடுத்து இத வித்துட்டு அவனுக்கு என்ன வேணுமோ அத வாங்கி கொடுங்க மீத காசுக்கு புது கோல்ட் செயின் வாங்கி தாங்க என்றார்.

இது அவனை மனதளவில் மிகவும் பாதித்தது என்று எங்களுக்கு அப்ப தெரியல.

மறுநாள் நான் வயித்து வலியால் ஸ்கூல் நா போகல.

ஸ்கூல் போகும்போது இந்த walkman ஐ அசோகிட்டயே கொடுத்துட்டு போயிர்றேன்னு சொல்லிட்டு தேவ் ஸ்கூல் போனான்.

அப்பா அந்த chain ஐ வித்துட்டு நாங்க ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்த சைக்கிள் ஆஹ் வாங்கிட்டு வந்திருந்தாரு. அதுக்கு அம்மா அவன் ஏதோ பாட்டு கேக்கேக்குறதுல வாங்கி கேட்டான் நீங்க சைக்கிள் ஆஹ் வாங்கிட்டு வந்துருக்கீங்க னு கேட்டாங்க.

அது எதுக்குடி அவங்களுக்கு,சைக்கிள் லா இருந்தாலும் ஸ்கூல் க்கு ஒழுங்கா போயிட்டு வருவாங்க னு சொன்னார்.

இது தெரியாத தேவ் அசோக்கிடம் walkman ஐ கொடுக்க போயிட்டு வீட்டுக்கு திரும்பி வரவே இல்ல.இப்ப அவன் எங்க இருக்கான் என்ன பண்றன் னு தெரியல என்றான் ராம்.

இதை ராம் ஜனனியிடம் சொல்லிமுடிக்கவும் ஜனனியின் பேங்க் வந்துவிட்டது.ஜனனியை பேங்க் ல் இறக்கி விட்டு ராம் போலீஸ் ஸ்டேஷன் வந்தான்.

தனது ஜூனியர் officer தனபால் இடம் கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகையை பழைய கிரிமினல்ஸ் ஓட கைரேகையோட பொருந்துதான்னு பார்க்க சொன்னான் ராம்.


சரி இப்ப தம்பி தேவ் என்ன பண்ணிக்கிட்டு இருக்கானு பாப்போம்.


(6 மாதங்களுக்கு முன் இடம் :கோவா )

தேவ் தனது நண்பன் வினோத்தோடு பேசிகிட்டு இருந்தான். வினோத் தேவ் இடம் எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி டைலியும் பார்ட்டி பண்ற ஏதுடா இவ்ளோ பணம் என்றான். அதற்க்கு தேவ் டேய் வினோத் நா இவ்ளோ நா பண்ணிக்கிட்டு இருந்த சாப்ட்வேர் இப்ப ஒர்க் ஆகுதுடா.இனி நம்ம கஷ்ட படப்போறதில்ல இனி இந்த சாப்ட்வேர் என்னோட பேங்க் account பணம் திருடி தரப்போகுது என்றான்.

(ஆம் நம் கதையின் தொடக்கத்தில் பார்த்த பொதுமக்களின் வாங்கி கணக்குகளில் இருந்து 1rs எடுத்துதது இவனது சாப்ட்வேர் தான்)

இதை கேட்ட வினோத் சூப்பர் டா.அப்பிடின்னா எனக்கு bike வாங்க ஒரு லட்சம் ரூபா எடுத்து கொடு என்றான். அதற்க்கு தேவ் முடியாது என்றான்.இப்ப தான் நான் அந்த சாப்ட்வேர் ஐ பயன்படுத்தி பணம் திருடினேன்.அடிக்கடி எடுத்தா நாம மாட்டிக்குவோம் .அதுமட்டும் இல்ல இந்த சாப்ட்வேர் ஆஹ் கொஞ்சம் update பண்ணவேண்டியிருக்கு என்றான் தேவ்.

என்னமாதிரி இத அப்டேட் பண்ணனும் என்று கேட்டான் வினோத்.

அதை சொல்ல தொடங்கினான் தேவ்.

1.எடுத்தவங்க அக்கௌன்ட் லிருந்தே திரும்பவும் பணம் எடுக்க கூடாது .

2.account 50000 மேல இருக்குறவங்க account லிருந்து மட்டும் பணம் எடுக்கணும்.

3government பேங்க் private பேங்க் னு எல்லா பேங்க் லெர்ந்த்தும் எல்லா branch லிருந்தும் திருடனும்.

4.இந்த software ஆஹ் us டாலர்ஸ்ஐயும் திருடுமாதிரி மாத்தனும் என்றான்.

இதை கேட்ட வினோத் எல்லாம் சரி அது ஏன் ஒவ்வொரு அக்கௌன்ட் லிருந்தும் 1 ரூபா மட்டும் எடுக்குற என்றான் .

அதற்க்கு தேவ் எங்க அப்பா சின்ன வயசுல எனக்கும் எங்க அண்ணனுக்கும் உண்டியல் வாங்கி கொடுத்தாரு.அவரு சொன்னாரு இன்னைலிருந்து இந்த உண்டியல் ல ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு ரூபா போட்டு இந்த வருஷ இதுல 365 ரூபா சேர்த்திருக்கணும் என்றார். எங்க அண்ணா காசு சேர்த்தான் நான் அவன்கிட்ட இருந்து எடுத்து சேர்த்தேன்.

கடைசில நா எங்க அண்ணாவை விட அதிக காசு வச்சிருந்தேன்.

ஆனா எங்க அப்பா கண்டுபுடிச்சிட்டாரு.

அதிகமா காசுவச்சிருந்தாலும் மாட்டிப்போம்.

அதிகமா காசு வச்சிருக்கவன்கிட்ட அதிகமா எடுத்தாலும் மாட்டிப்போம் ,குறைவா காசுவைச்சிருக்கவன்கிட்ட காசு எடுத்தாலே மாட்டிப்போம் 6 மாதம் போகட்டும் பணம் எடுத்து தருகிறேன் என்றான் தேவ்.

இப்போ சென்னைல ராமுக்கு கொள்ளையர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதற்கான தகவல் கிடைக்கிறது.ராம் தனது போலீஸ் டீமுடன் அவர்களை பிடிக்க செல்கிறான்.அங்கு கொள்ளையர்களுக்கு போலீஸ்க்கும் சண்டை ஏற்பட்டதில் ராமுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருந்தபோதும் கொள்ளையர்களை பிடித்துவிட்டனர். இதனால் ராம் ஒருவாரம் ஹாஸ்ப்பிட்டல் ல் அனுமதிக்கப்பட்டான்.செய்தி அறிந்த ராமின் அப்பா சென்னை க்கு வந்து அவனை கவனித்து கொண்டார்.

காயம் சரியான்னபின் ஜனனியை பார்க்க விரும்பிய ராம் என்ன காரணமா வச்சி ஜனனியை பார்க்க போகலாம் என்று யோசித்து கொண்டிருந்தான் .அந்த திருட்டு கேஸ் ஐ விசாரிக்க போலாமா.இந்த கேஸ் முடிஞ்சிடுச்சு.வேற என்ன பண்ணலாம் என யோசிக்கும் போது ஒன்னு நினைவிற்கு வந்தது,நாம காலேஜ் படிக்கும்போது scholarship க்காக ஓபன் பண்ண பேங்க் ல தான ஜனனி ஒர்க் பண்றங்க அந்த அக்கௌன்ட் active ல இருக்கானு கேக்கபோகலாம் என்று ஜனனியை பார்க்க பேங்க் க்கு போனான் ராம்.

ஜனனி ராம் ஐ பார்த்தவுடன் என்ன சார் அந்த திருட்டு பசங்கள புடிச்சிட்டிங்கபோல,இப்ப என்ன விஷயமா வந்துருக்கீங்க என்றாள். அதற்க்கு இந்த account active ல் இருக்கானு பார்த்து சொல்லுங்க என்று passbook ஐ கொடுத்தான் ராம்.

அதை செக் பண்ண ஜனனி இல்ல சார் இதுல மினிமம் balance எ இல்ல என்றாள்.அதற்க்கு ராம் இல்லையே மினிமம் பாலன்ஸ் 500rs இருந்துச்சே என்றான்.

அதற்க்கு ஜனனி 6 மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் மினிமம் balance இருந்துருக்கு ஆனா நீங்க யாருக்கோ 1 rs உங்க account லிருந்து அனுப்பிருக்கிங்க இதனால உங்க அக்கௌன்ட் balance 499rs மாறிடுச்சு.மினிமம் balance மைண்டைன் பண்ணதால பேங்க் மாசமாசம் fine போட்டு இப்ப 0 balance தான் இருக்கு என்றாள் ஜனனி.

வெறும் 1ruba மட்டும் யாருக்காவது அனுப்புவாங்களா.கடந்த 1 வருசமா இந்த அக்கௌன்ட் ஆஹ் நா use பன்றதே இல்ல என்றான் ராம் .சரி யாருக்கு அந்த 1ரூபா அனுப்பிருக்கேன் பார்த்து சொல்லுங்கள் என்றான் ராம்.

amount receive ஆனா அக்கௌன்ட் holder நமே தேவ் செல்வம் னு இருக்கு என்றாள் ஜனனி.உங்க தம்பிக்கு தான் அனுப்பிருக்கிங்க என்றாள்.

இதைக்கேட்டதும் ராம் பயங்கரமாக அதிர்ச்சி அடைந்தான். நான் எனது தம்பியை கடைசியா 7வது படிக்கும்போது பார்த்தது.இறுதியாக அந்த சம்பவம் நடந்தபின் எனக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்ல.இப்படி இருக்கும் போது நா எதுக்கு அவனுக்கு காசு அனுப்ப போறேன் அதுவும் வெறும் 1ரூபா.சரி அவன் இப்ப எங்க இருக்கானு தெரிச்சிக்கணும் அவன் அக்கௌன்ட் details எனக்கு வேணும் என்றான் ராம்.

அது லீகல் ஆஹ் முடியாது ஆனா நா யாருக்கும் தெரியாம எடுத்துக்கிட்டு வர்றேன் நாளைக்கு ஈவினிங் பக்கத்துல இருக்குற காபி ஷாப் ல வெயிட் பண்ணுங்க நா அத எடுத்துக்கிட்டு வந்து தர்றேன் என்றாள் ஜனனி.

மறுநாள் மாலை காபி ஷாப் ல் ராம் காத்துக்கொண்டிருக்கையில் அவனது சிறுவயது நண்பன் அசோக் ஐ எதிர்ச்சியாக பார்த்தான்.இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ராம் அசோக் கிடம் எப்படி இருக்க இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க என கேட்டான்.

ம்ம் நா நல்ல இருக்கேன்,காலேஜ் ல வச்ச அந்த நாலு arears ஆஹ் clear பண்ண முடியல இப்ப அப்பாவோட bussiness ஆஹ் தான் பாத்துகிட்டு இருக்கேன் என்றான் அசோக்.

நீ காலேஜ் வச்ச அந்த 2 arear clear பண்ணிட்டியா என கேட்டான் அசோக் ?

அதற்க்கு ராம் அதெல்லாம் எப்போவோ clear பண்ணிட்டேன் என்றான்.

அசோக் ராமிடம் நீதான் உனக்கு புடிக்காத exam வந்தா exam hall லேயே தூங்கிடுவியே அத எப்படி clear பண்ண என்றான் அசோக் .

அதற்க்கு ராம் அதெல்லாம் அப்படித்தான் என்று சொல்லி சிரித்தான்.

சரி இப்ப எங்க வேலை பாக்குற என கேட்டான் அசோக் .

நா இப்போ போலீஸ் ஆஹ் இருக்கேன் என்றான் ராம் .

அசோக் க்கு ஒரு நிமிடம் முகம் மாறியது .

computer science engineering படிச்சிட்டு என்ன போலீஸ் ஆகிட்டா என கேட்டான் அசோக்.

அதற்க்கு அசோக் எனக்கு சின்ன வயசுலிருந்தே போலீஸ் ஆகணும்னு தான் ஆச என்ன அப்பா வற்புறுத்தி தான் என்னய இன்ஜினியரிங் படிக்க வச்சாரு எப்படியோ டிகிரி வாங்குனே போலீஸ் ஆகிட்டேன் என்றான் ராம் .

சிறிது நேரம் அசோக் ராமிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒருநாள் வீட்டுக்கு வருவதாக கூறி ராமின் வீட்டு முகவரி வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சிறிது நேரத்திற்கு பின் ஜனனி தேவ் பேங்க் அக்கௌன்ட் details பற்றிய விவரங்களுடன் அங்கு வந்தார்.

தேவ் அதை வாங்கி பார்த்தான்.

ஜனனி ராமிடம் உன்னுடைய அக்கௌன்ட் லிருந்து மட்டும் அவனுக்கு 1 ரூபா போகல நெறைய பேர் அக்கௌன்ட் லிருந்து 1 ரூபா தேவ் அக்கௌன்ட் க்கு அனுப்பிருக்காங்க.

உன் தம்பி தேவ் என்ன gpay use பண்ணி பிச்சை எடுக்குறானா என வேடிக்கையாக கேட்டாள்.

தேவ் பேங்க் அக்கௌன்ட் details ஆஹ் பார்த்துக்கொண்டிருந்த ராம் இல்ல அவன் திருடுறான் என்றான்.

அதிர்ச்சி அடைந்த ஜனனி எப்படி சொல்லிரிங்க என்றாள்.

இத பார் அவனோட அக்கௌன்ட் க்கு ஒரு லட்சம் பேர் அக்கௌன்ட் லிருந்து ஒரே time ல ஒருவரு ரூபாவை receive ஆகியிருக்கு.அதுவும் பர்டிகுலரா உங்க பேங்க் அக்கௌன்ட் holders ட்ட மட்டும் இருந்து அவனுக்கு காசு போயிருக்கு.அதுக்கு பிறகு எந்த tranaction னும் நடக்கல.அவன் எதுவும் கம்பெனிளையும் வேலைபாக்குற மாதிரியும் தெரியல என்றான் ராம். .

எனக்கு என்னமோ உங்க பேங்க் server hack பண்ணிருக்கானு நெனைக்கிறேன் என்றான் ராம்.

அவனை புடிக்க முடியுமா என்றாள் ஜனனி.

கடைசி 6 மதத்துல அவன் கோவா மும்பை லடாக் னு நெறைய எடுத்துள்ள பணம் withdraw பண்ணிருக்கான்.so கண்டு பிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.ஆனா அவன் அக்கௌன்ட் லிருந்து இனிமே transaction நடந்துச்சின்னா கண்டுபிடுச்சிடலாம்,இத cyber crime கிட்ட சொல்லி விசாரிக்க சொல்றேன் என்றான் ராம்.

வீட்டுக்கு வந்த ராம் தனது அப்பாவிடம் தேவ் திருடியதை பற்றி சொன்னான்.அதற்க்கு அப்பா சிரித்தார்.அவர் ஏன் சிரித்தார் என்ற கரணம் ராமிற்கு புரியவில்லை.

சிலநாட்களுக்கு பிறகு ராமிற்கு cyber crime லிருந்து தகவல் வந்தது.அந்த ஹேக்கிங் க்கு உதவிய சாப்ட்வேர் இயங்கியதற்கான ip அட்ரஸ் கிடைத்தது.

ip அட்ரஸ் ஐ வைத்து அந்த முகவரியை கண்டறிந்த ராம் அதிர்ச்சி அடைந்தான்.ஏனென்றால் அது அவன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பை காட்டியது.

தேவ் என்னையும் கண்காணித்துக்கொண்டு இவ்வாறு செய்ததாக ராம் உணர்ந்தான்.

உடனே ராம் தனது போலீஸ் டீம் ஓடு அங்கு சென்று ஒவ்வொரு வீடாக சோதனை இட்டான்.

ஆனால் சோதனையில் தேவ் பயன்படுத்திய கம்ப்யூட்டரோ அவன் இங்கு இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

ராம் வேதனை அடைந்தான்.இதை அனைத்தையும் அவனது அப்பா கவனித்து கொண்டிருந்தார்.

(சிலநாட்களுக்கு பிறகு )

ராம் தேவ் ஐ தேடுவதை அறியாத தேவ் வினோத் பைக் வாங்க கேட்ட பணத்தை வினோத் அக்கௌன்ட் பணம் அனுப்பி பைக் வாங்கிக்க சொன்னான் தேவ்.

வினோத் atm ல் பணம் எடுத்துக்கொண்டு பைக் வாங்க சென்றான்.இந்த தகவல் சைபர் crime க்கு தெரியவந்தது.இரண்டு போலீஸ் அவனை பிடிக்க விரைந்தனர்.இந்த தகவலை ராமிற்கும் தெரியப்படுத்தினர்.

பைக் ஷோரூம் ல் இருந்த வினோத்திடம் அங்கு சென்ற போலீஸ் பைக் வாங்க எது பணம் என்று கேட்டனர்.அதற்க்கு வினோத் என்னுடைய பணம் தான் என்றான்.தேவ் ஆஹ் உனக்கு தெரியுமா என்று போலீஸ் கேட்டனர்.தேவ் ஐ பற்றி விசாரிக்க தொடங்கியதும் சுதாரித்துக்கொண்ட வினோத் அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்து அவர்களை தள்ளிவிட்டு அவன் புதியதாக வாங்கி பைக் ஐ எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான்.பிறகு அந்த போலீஸ் ம் அவனை பின்தொடர்ந்து சென்றன.அவர்களுக்குள் நடந்த போட்டியில் வினோத் எதிரே வந்த லாரி ல் மோதி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.

சம்பவ இடத்திற்கு வந்த ராம் ஐ பார்த்து தேவ் என்னை காப்பாத்து, தேவ் என்னை காப்பாத்து என்றான் வினோத்.இந்த வார்த்தைகளை கேட்ட ராம் அங்கேயே மயங்கி விழுந்தான்.இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் அசோக் எதார்த்தமாக ராம் ஐ பார்க்க ராமின் வீட்டிற்கு சென்றிந்தான்.அசோக் ராமின் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தான்.அப்போது அசோக் ராமின் தந்தையிடம் ஏதோ சொல்லவருகையில் டிவி ல் காவலர் ராம் க்கு விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டனர்.

நடந்த இந்த சம்பவத்தை செய்தி தொலைக்காட்சிகள் காவலர் ராம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தவறாக செய்திவெளியிட்டுவிட்டனர்.

இதனை பார்த்த ராமின் தந்தை மற்றும் அசோக்,ஜனனி எல்லோரும் பதட்டத்துடன் ராம் ஐ பார்க்க மருத்துவமனை சென்றன. மருத்துவமனையில் ராமின் மேலதிகாரிகள் அனைவரும் இருந்தனர் .மேலதிகாரிகள் ராமின் தந்தையிடம் வினோத் தான் இறந்துவிட்டதாகவும் ராமிற்கு எந்த ஆபத்தும் இல்ல செய்தி தொலைக்காட்சிகள் தவறாக செய்தி வெளிட்டுவிட்டதாக சொன்னார்கள். இதை கேட்ட ராமின் தந்தை மற்றும் ஜனனி ,அசோக் நிதானம் அடைந்தனர்.

ராம் கண்முழிதான் .

மேலதிகரிகளின் முன்னிலையில் ராமிடம் அவனது தந்தை இனிமேல் இந்த கேஸ் ஐ விசாரிக்காதிங்க என்றார். இதை கேட்ட ராம் இல்ல அப்பா என்னால தம்பிய கண்டுபிடுச்சு அவன நல்லவழிக்கு கொண்டுவர்ற முடியும் என்றான். அதற்க்கு அப்பா நா சொல்றது உனக்கு புரியலையா நா நீ இந்த கேஸ் விசாரிக்க வேண்டாம் னு சொல்லல இந்த கேஸ் ஆஹ் யாருமே விசாரிக்க வேண்டாம்னு சொல்றேன் என்றார்.

அதற்க்கு மேலதிகாரிகள் ஏன் சார் அப்படி சொல்றிங்க உங்க சின்ன பையன காப்பாத்தனும்னு பாக்குறீங்களா என கேட்டனர். அதற்க்கு ராமின் தந்தை சில உண்மைகளை சொல்ல தொடங்கினார்.

இனிமே இந்த விசயத்துல எந்த உயிரும் போகக்கூடாதுனு தான் இந்த உண்மைகளை சொல்கிறேன் என்றார்.

எனது இரண்டாவது மகன் தேவ் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே இறந்துவிட்டதாக கூறினார்.

இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அசோக் ஐ தவிர.

ஏன் என்றால் இது அவனுக்கு ஏற்கனவே தெரிவதுபோல் தெரிகிறது.ஆனால் அவன் ஒருவிதமான குற்ற உணர்ச்சியில் கண்கலங்கி நின்று கொண்டிருந்தான்.

அப்பா சொன்னதை கேட்ட ராம் அதை ஏற்க மறுத்தான்.இல்ல அப்பா நீங்க தேவ் ஆஹ் காப்பாத்த பொய் சொல்றிங்க என்றான். அப்பா விடம் வாக்குவாதம் செய்தான்.

இருவருக்கும் விவாதம் முற்றும் பொது இதை கவனித்துக்கொண்டிருந்த அசோக் தேவ் செத்துட்டான் நான் தான் அவன கொன்றேன் என்று அனைவரின் முன்னிலையில் கத்தி கூறினான்.

இதை கேட்ட ராம் அப்பாவுடன் விவாதம் செய்வதை நிறுத்திவிட்டு அமைதியடைந்தான்.

அசோக் பேச தொடங்கினான்,அன்னைக்கு தேவ் அசோக்கிடம் இருந்து திருடிய walkman ஐ தேவ் இன் அப்பா அசோக்கிடம் கொடுக்க சொன்னார்.தேவ் என்கிட்ட அத கொடுக்க வந்தான்.என்னோட காணாம போன walkman அவன்கிட்ட இருக்கறத பாத்து எனக்கு கோவம் வந்துடுச்சி.அங்க வந்துருக்கிறது ராம் னு நினைச்சி walkman அவன்கிட்ட இருந்து புடுங்கிகிட்டு அவனை கிணத்துல தள்ளிவிட்டு அங்கிருந்து வந்துட்டேன்.

தேவ் செத்துபோயிட்டான். மறுநாள் தான் எனக்கு தெரிச்சிச்சு நா தள்ளிவிட்டு வந்தது ராம் இல்ல தேவ் ஆஹ் னு.

(இதை தான் அசோக் ராமின் அப்பாவிடம் சொல்ல வந்தான்.மற்றும் முதன்முதலாக ராம் தன்னை போலீஸ் என்றவுடன் அசோக்கின் முகம் மாறியதற்கு காரணமும் இதான்)

இந்த சம்பவத்தால அவங்க அம்மா மனநிலை பாதிக்க பட்டாங்க. சிலநாட்களுக்கு பிறகு அவங்க தீ வச்சிக்கிட்டு இறந்துட்டாங்க.அவங்க அம்மா சாகும் தருவாயில் ராமை தேவ் என நினைத்து தேவ் என்ன காப்பாத்து தேவ் என்ன காப்பாத்து என கெஞ்சியபடி உயிரை விட்டாங்க. இந்த உண்மையை சொன்னபடி அசோக் அழுதுகொண்டே ராமிடம் மண்டியிட்டு நா தெரியாம இப்படி பண்ணிட்டேன் டா என்ன மன்னிச்சுடு என்றான்.

அவன் அழுவதை கண்ட ராம் அசோக் அதை வேணும்னு பண்ணல என உணர்ந்தான். அப்படினா பேங்க் ல இருந்து காச திருடியது யார்னு கேட்டான் ராம்.

அதற்க்கு அவனது அப்பா நீ தான் என்றார்.

ராம் அதிர்ச்சியுடன் என்னங்க அப்பா மொதல்ல தம்பி செத்துட்டான்னு சொன்னிங்க இப்ப என்னடானா அவன் திருடுனதை நான் தான் திருடுனதா சொல்லுறீங்க என்றான்.

அதற்க்கு அப்பா நீ என்றால் நீ இல்ல உனக்குள்ள இருக்குற தேவ் தான் திருடினது .

ஆமா ராமும் நீ தான் தேவும் நீ தான்.

தேவ் இறந்த சிலநாட்களுக்கு தேவ் உன்கிட்ட தினமும் பேசறதா என்கிட்ட சொல்லுவ.காலப்போக்குல இது சரி ஆகிடும் னு நெனச்சேன் ஆனா அம்மாவோட இறப்பு அத இன்னும் அதிகமாக்கிடுச்சி.மொதல்ல தேவ் உன்கிட்ட பேசுறத மட்டும் சொன்ன நீ சில நேரங்கள்ல தேவ் மாதிரியும் நடந்துக்க ஆரம்பிச்சிட்ட.ஸ்போர்ட்ஸ் ல மட்டும் கவனமா இருந்த நீ தேவ் மாதிரி நல்ல படிக்கவும் ஆரம்பிச்சிட்டா.இதனால நா அத பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன்.

நீ ரெண்டு விதமா நடந்துகிறதா எனக்கும் தோணும் என்றான் அசோக்.நீ காலேஜ் தடவை ல உனக்கு புடிக்காத எக்ஸாம் எழுத போன நீ எக்ஸாம் ஹால்லேயே தூங்க ஆரம்பிச்சிடுவா.ஆனா எக்ஸாம் முடியப்போற நேரத்துல நீ பேய் மாதிரி எழுதுவ.உன்னோட அந்த ரெண்டு arears ஐயும் தேவ் எழுதிதான் நீ பாஸ் ஆகிருப்ப னு எனக்கு தோணுது என்றான் அசோக்.

அப்படினா எனக்கு பேய் புடிச்சிருக்குனு சொல்லுறிங்களா என்றான் ராம்.

இத கேட்ட டாக்டர் இல்ல உங்களுக்கு இருக்கிறது multible personality.நீங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடி நெத்தில அடிபட்டுருச்சின்னு இங்க admit ஆனீங்க தெரியுமா அப்ப அட்மிட் ஆகும்போது ராம் னு sign பண்ணிருக்கீங்க ஆனா டிஸ்சார்ஜ் ஆகும்போது தேவ் னு sign பண்ணிருக்கீங்க பாருங்க என அட்மிஷன் form ஐ ராமிடம் காட்டினார் டாக்டர்.

ராம் அதன்பிறகு புரிந்து கொண்டான்.

மேலதிகாரிகளும் இந்த case ஐ இனி விசாரிக்க வேண்டாம் என முடிவெடுத்தனர்.ஆனால் ராமிற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தவேண்டும் என்றனர்.

ஆனால் டாக்டரோ நாம சிகிச்சை கொடுத்த ராம் இல்ல தேவ் ரெண்டு பெரு யாரை வேணும்னாலும் அவன் மாறலாம் என்றார் .

ராம் அவனது அப்பாவிடம் உனக்கு யாருப்பா வேணும் என்றான்.

அதற்க்கு அவனது அப்பா தழுதழுத்த குறளில் எனக்கு ரெண்டு பேருமே மகன் தாண்ட என்றார்.

தேவ் மீண்டும் ராமிற்குள் வந்தானா என்பதை chapter 2 ல் பார்ப்போம்.

Comments