drone

                                                                       


                                                                         

                                          drones
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்


fpv
இந்தியாகுள்ள ட்ரோன்ஸ் யூஸ்  பண்ணனும்னா லைசென்ஸ் வாங்கணும்ங்க.இந்த லைசென்ஸ்  வாங்கணும்னா சென்னை ல உள்ள இன்ஸ்டிடியூட் ல கோர்ஸ் ஒன்னு பண்ணுன லைசென்ஸ் வாங்கலாம்.
லைசென்ஸ் இல்லாம ட்ரோன்ஸ் யூஸ்  பண்ண வழி இருக்கானு கேட்டா  அதுக்கும் வழி இருக்கு .


அது எப்படினா இந்தியால யூஸ் பன்ற  ட்ரோன்ஸ்ச ரெண்டு வகையா பிரிக்கிறாங்க.250 கிராம் வெயிட்டுக்கு மேல உள்ள ட்ரோன்ஸ் ,250 கிராம் வெயிட்டுக்கு கீழ உள்ள ட்ரோன்ஸ்னு ரெண்டு வகையா பிரிக்கிறாங்க.அதுல 250 கிராம்க்கு கீழ உள்ள ட்ரோன்ஸ்ச குழந்தைகள் விளையாட்டு பொருள் என்ற வகைல வரும் .இந்த வகை ட்ரோன்ஸ் யூஸ் பன்றதுக்கு எந்த லைசென்ஸ்ம்  வாங்கவேண்டிய அவசியம் இல்ல.

குழந்தைகள் யூஸ் பன்ற ட்ரோன் நல்லா இருக்காதேனு நெனைக்காதிங்க .அந்தவகை ட்ரோன்ஸ்லயும் நல்ல 4k கேமரா கொண்ட ட்ரோன்ஸ் இருக்குங்க 

ட்ரோன்ஸ்ச manufacturing பன்ற கம்பெனி பெஸ்ட் எதுனா dji தாங்க.இந்தவகை  கம்பெனி ட்ரோன்ஸ்ல tello னு ஒரு ட்ரோன் உற்பத்தி பன்றாங்க.இந்த ட்ரோன் 250கிராம்க்கு எடை  குறைவா உள்ள ட்ரோன்.மேலும் இதன் கேமரா திறன் 720p HD திறன் கொண்டது . இதன் விலை பாத்தீங்கன்னா இந்திய ரூபா மதிப்புக்கு 10000 முதல் online ல கிடைக்குது .இத தவிர்த்து இந்த கம்பெனி dji mavic air ,dji mavic ப்ரோ,dji spark னு நிறைய ட்ரோன்ஸ் உற்பத்தி செய்து விற்கின்றாங்க .இந்தவகை ட்ரோன்ஸ் எல்லாம் 250கிராம்க்கு மேல உள்ள ட்ரோன்ஸ் மற்றும் இதன் விலை பாத்தீங்கன்னா 30000 முதல் 150000 வரை உள்ளது.மேலும் இந்தவகை ட்ரோன்ஸ் யூஸ்பண்ண கண்டிப்பா லைசென்ஸ் வேணும்.மேலும் இந்தவகை ட்ரோன்ஸ்களை  திருவிழாக்கூட்டம் போன்ற பொதுவெளிகளில் யூஸ் பண்ண போலீசிடம் அனுமதி வாங்க வேண்டும்.


DJI தவிர வேற எந்த கம்பெனி ட்ரோன் உற்பத்தி செய்றாங்கனு  கேட்ட  MI ,JJRC  போன்ற இதர கம்பெனிகளும் ட்ரோன்ஸ் உற்பத்தி செய்றாங்க.250 கிராம்க்கு எடை குறைவா நல்ல ட்ரோன் வாங்கணும்னு நெனைச்சீங்கனா BANGGOOD போன்ற இன்டர்நேஷனல் ONLINE SHOPPING MARKET ல் வாங்கலாம் .ஆனால் இவ்வாறு நீங்கள் வாங்கும்போது கஸ்டம்க்கு எதற்க்காக நீங்கள் அதை வாங்குகின்றிர்கள் என்ற விளக்கம் கொடுக்க வேண்டும்.இந்திய ONLINE SHOPPING ல் 250 கிராம்க்கு  எடை குறைவான நல்ல கேமரா கொண்ட ட்ரோன்ஸ் எதுன்னு கேட்ட எனக்கு தெரிந்தவரை DBUS2,C-ME,என்ற இரண்டு  ட்ரோன்ஸ்  பெஸ்ட்.250கிராம்க்கு எடை குறைவா உள்ள ட்ரோன்ஸ் SELFIE ட்ரோன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ட்ரோன்ஸ் வாங்குறதுக்கு முன்னாடி அந்த ட்ரோன் எடை ,FLYING TIME,BATTERY CAPACITY,போன்றவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்க .




மேலும் இந்தவகை ட்ரோன்களை  கன்ட்ரோல் செய்ய அந்தந்த நிறுவனங்களே மொபைல் அப்ளிகேஷன் வைத்துள்ளனர்.அதனை பயன்படுத்தி நமது மொபைல் மூலமாகவே அதனை கன்ட்ரோல் செய்யலாம் .பெரும்பான்மையான ட்ரோன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சீனா நிறுவனங்களே அதிகம் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு ட்ரோன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இல்லை



                                              நன்றி 


















Comments