Right to Education Act (RTE) மூலம் தனியார் பள்ளியில் இலவச கல்வி

தமிழ்பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள். Right To Education Act,2009 Section 12.1(c) இன் படி தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை,மற்றும் நடுத்தரகுடும்பத்தினரின் குழந்தைகள் இலவசமாக படிக்க அரசாங்கம் வழிவகை செய்துள்ளது.இச்சட்டத்தின் மூலம் ஏழை குடும்பத்தினரின் குழந்தைகள் 8 ஆம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்னவென்று பார்ப்போம். a .WS(நலிவடைந்த பிரிவினர்) b .DG(வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்) 1.குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகள். 2. பட்டியலின, பழங்குடியினரின் குழந்தைகள். 3.திருநங்கைகள்,எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்,துப்புரவு தொழிலார்களின் குழந்தைகள். மேற்குறிப்பிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் நீங்கள் உங்களின் குழந்தைக்காக விண்ணப்பிக்கலாம். 2020 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27.08.2020,விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2020. 2020 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் குழந்தையின் வயது விவரம் LKG வகுப்ப...