india post office recruitment 2020 for tamilnadu
தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
இந்தியா போஸ்ட் ஆபீஸ் இல் தமிழ்நாடு circle க்கான 3162 பணியிடங்களுக்கு மாபெரும்
வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வந்துள்ளது.இந்த வேலையானது 10 ஆம் வகுப்பு மதிப்பெண்
அடிப்படையில் வழங்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2020 இதில் ews
பிரிவினருக்கு 311 இடங்களும் obc பிரிவினருக்கு 743 இடங்களும் pwd
A,B,C,DE,பிரிவினருக்கு முறையே 15,37,37,5 இடங்களும் sc,st பிரிவினருக்கு முறையே
502,25 மற்றும் ur பிரிவில் 1487 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் obc பிரிவினர்கள் obc certificate க்கு apply செய்து அதனை
பெற்ற பிறகு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அந்த obc certificate ஐ upload
செய்யும்படி இருக்கும்.obc (other backward class) என்பது bc,mbc பிரிவினரை
உள்ளடக்கிய மத்திய அரசின் ஒரு reservation முறையாகும்.
obc certificate ஐ பெற income certificate அவசியமாகும். முதலில் நாம் அருகில் உள்ள
esevai மையத்திற்கு சென்று குடும்ப தலைவரின் போட்டோ குடும்ப உறுப்பினர்களின் ஆதார்
xerox எடுத்துச்சென்று income certificate க்கு விண்ணப்பிக்கவேண்டும்.இதற்கான
கட்டணம் ரூ60 மட்டுமே.இந்த விண்ணப்பத்தை vao,ri போன்ற அரசு அதிகாரிகள்
சரிபார்த்துவிட்டு நமக்கான income certificate ஐ approve செய்வார்கள்.இந்த income
certificate ஐ நாம் online இல் download செய்துகொள்ளலாம்.income certificate பெற
ஒரு வாரகாலம் எடுத்துக்கொள்ளும்.
இப்போது பெறப்பட்ட income certificate மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபரின்
போட்டோ ஆதார் xerox,community certificate xerox போன்றவற்றை மீண்டும் esevai
மையத்திற்கு எடுத்துச் சென்று obc certificate ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.மீண்டும்
vao,ri போன்ற அரசு அதிகாரிகள் சரிபார்த்துவிட்டு நமக்கான obc certificate ஐ approve
செய்வார்கள்.இந்த obc certificate இல் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும்
கீழ் உள்ளவர்களுக்கு non creamy layer என்றும் குடும்ப ஆண்டு வருமானம் 8
லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு creamy layer என்றும் mention
பண்ணிருக்கும்.இது உங்கள் குடும்ப ஆண்டு வருமானத்தை பொறுத்தது.obc certificate ஐ
சுருக்கமாக விளக்கவேண்டுமானால் இது மத்திய அரசின் community certificate என்று
சொல்லலாம் ஆனால் இதில் குடும்ப ஆண்டு வருமானம் குறிப்பிட படுவதால் இந்த certificate
வருடாவருடம் விண்ணப்பித்து புதிதாக பெறவேண்டும்.obc certificate ஆனது மத்திய அரசு
வேலை அனைத்திற்கும் பயன்படும்.இதுபோலவே ews இடஒதிக்கீட்டிற்கும் ews certificate
விண்ணப்பித்து பெறவேண்டும்.ews என்பது economically weaker section என்பதன்
சுருக்கமாகும். sc ,st பிரிவினர் தங்களுக்குரிய மாநில அரசின் community certificate
யே பயன்படுத்தலாம்.புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.
இந்த காலிப்பணியிடங்கள் obc பிரிவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட 743 இடங்களில் obc
பிரிவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.அதுபோலவே sc ,st பிரிவினர்களுக்காக
ஒதுக்கப்பட்ட இடங்களில் sc ,st பிரிவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.ஆனால் ur
என்று ஒதுக்கப்பட்டுள்ள 1487 இடங்களுக்கு எந்த பிரிவை சேர்ந்தவர்களும்
விண்ணப்பிக்கலாம்.ur என்பது unreserved என்பதன் சுருக்கமாகும்.ஆனால் இந்த ur
இடங்களில் போட்டி சற்று அதிகமாகவே இருக்கும்.இதில் அதிக மதிப்பெண் எடுத்த அணைத்து
பிரிவினையும் சேர்ந்த மாணவர்கள் இந்த இடங்களில் தாராளமாக போட்டியிடலாம்.இதற்க்கான
விண்ணப்பக்கட்டணம் obc,ur பிரிவுக்கு ரூ 100ம் sc,st பிரிவுக்கு கட்டணமின்றியும்
விண்ணப்பிக்கலாம்.ஒருவர் அதிகபட்சமாக 20 இடங்கள்வரை விண்ணப்பிக்கலாம்.
நன்றி வணக்கம்
Comments
Post a Comment