Right to Education Act (RTE) மூலம் தனியார் பள்ளியில் இலவச கல்வி
தமிழ்பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.
Right To Education Act,2009 Section 12.1(c) இன் படி தனியார் பள்ளிகளில் 25%
இடங்கள் ஏழை,மற்றும் நடுத்தரகுடும்பத்தினரின் குழந்தைகள் இலவசமாக படிக்க அரசாங்கம்
வழிவகை செய்துள்ளது.இச்சட்டத்தின் மூலம் ஏழை குடும்பத்தினரின் குழந்தைகள் 8 ஆம்
வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம்.
இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்னவென்று பார்ப்போம். a .WS(நலிவடைந்த
பிரிவினர்) b .DG(வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்) 1.குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2
லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகள். 2. பட்டியலின,
பழங்குடியினரின் குழந்தைகள். 3.திருநங்கைகள்,எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின்
குழந்தைகள்,துப்புரவு தொழிலார்களின் குழந்தைகள். மேற்குறிப்பிட்டவற்றில் ஏதேனும்
ஒன்றில் நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் நீங்கள் உங்களின் குழந்தைக்காக
விண்ணப்பிக்கலாம்.
2020 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27.08.2020,விண்ணப்பிக்க
கடைசி தேதி 25.09.2020. 2020 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்
குழந்தையின் வயது விவரம் LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்க 31.05.2016 to 31.07.2017
க்குள் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும்,1st standard வகுப்பிற்கு விண்ணப்பிக்க
31.05.2014 to 31.07.2015 க்குள் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள். 1).குழந்தையின் passport size போட்டோ
2).குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் 3).பெற்றோரின் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டு
4).வருமான சான்றிதழ் 5).சாதி சான்றிதழ் 6).சிறப்பு சான்றிதழ் ஏதேனும்
விண்ணப்பிக்கும் முறை rte.tnschools.gov.in என்ற தமிழக அரசின் இணைய தலத்தில்
நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் இதில் விண்ணப்பிக்க 5 நிலைகளை பூர்த்திசெய்யவேண்டும்.click the start
application.
1).முதல் நிலை personal details இதில் குழந்தையின்
பெயர்,பாலினம்,பிறந்ததேதி,மதம்,சமூகம்,அலைபேசி எண்,password போன்றவற்றை பூர்த்தி
செய்யவேண்டும். (இதில் வரும் application number ஐயும் நீங்கள் கொடுக்கும் password
ஐயும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது குறிப்பெழுதிக்கொள்ளுங்கள்).
2).இரண்டாம் நிலை parent details முதல்நிலை முடிந்தவுடன் உங்களுக்கான application
number உம் click here to login என்ற Potton உம் வரும். click here to login என்ற
Potton ஐ click செய்து உங்களுக்கான application number மற்றும் password ஐ
பயன்படுத்தி login செய்யவும். இந்த நிலையில் தந்தையின் பெயர், தந்தையின்
தொழில்,குடும்ப ஆண்டு வருமானம்,எந்த வகையின் கீழ் விண்ணப்பிக்க இருக்கிறீர்கள்
போன்றவற்றை பூர்த்தி செய்யவேண்டும்.
3).மூன்றாம் நிலை address details இந்த நிலையில் உங்கள் முகவரியை குறிப்பிட
வேண்டும்,உங்களது landmark map குறிப்பிடும் படி இருக்கும்.இந்த நிலையை பொறுத்தே
ஐந்தாம் நிலையான ஸ்கூல் selection கிடைக்கும்.
4).நான்காம் நிலை documents இந்த நிலையில் குழந்தையின் போட்டோ(100kb) ,பிறப்பு
சான்று(1mb),பெற்றோர் அடையாள அட்டை (ஆதார் கார்டு )(1mb),முகவரி சான்று (ரேஷன்
கார்டு,அல்லது ஆதார் கார்டு )(1mb),வருமான சான்றிதழ் (1mb),மேற்கண்ட சான்றுகளை jpg
அல்லது jpeg format இல் upload செய்யவேண்டும்.
5). ஐந்தாம் நிலை select school நீங்கள் மூன்றாம் நிலையில் கொடுத்த landmark
அடிப்படையில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள school பெயர் இதில்
வரும்.நீங்க அருகில் இருக்கும் aero mark ஐ பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான
school ஐ தேர்வு செய்யலாம்.அதன் பின்னர் save option select செய்து final submit ஐ
கொடுக்கவும்.அதன் பின்னர் அந்த application ஐ print எடுத்துக்கொள்ளவும்.
Comments
Post a Comment