How to create abaqus rigid part

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

dassault systemes abaqus

hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் rigid part எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.இதில் rigid part என்பது மிகவும் கடினமான அமைப்பு போன்றதாகும்.simulation ன் பொது tool போன்ற அமைப்பிற்கு இந்த முறையை பயன்படுத்தலாம்.இந்த rigid part ஐ இரண்டு முறைகளில் உருவாக்கலாம்.

முதல் முறையில் இதை part creation ல் discrete rigid அல்லது analytical rigid ஐ பயன்படுத்தி உருவாக்கலாம்.ஆனால் இந்த முறையில் rigid part ஐ உருவக்கினால் அந்த rigid part க்கு எவ்வித பொருட்பண்புகளும் கொடுக்க இயலாது.இரண்டாவது முறையில் part creation ல் deformable ஆக part ஐ உருவாக்கிக்கொண்டு interaction section ல் rigid body க்கான constraints ஐ கொடுக்கலாம்.மேலும் இந்த முறையில் rigid part ஐ உருவாக்குவதால் பொருட்பண்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

coursera abaqus

இந்த முறையை செயல்படுத்த அந்த rigid part ன் மீது reference point ஐ ஏற்படுத்த வேண்டும்(tool >reference point).இந்த reference point க்கு ஏதேனும் ஒரு பெயர்கொடுத்தால் அந்த பெயரை constraint manager றிலும் boundary condition கொடுக்கும்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதை side menu bar ல் assembly >set >create ல் reference point ஐ select செய்து reference point க்கான புதிய பெயரை உருவாக்கி கொள்ளலாம்.பின்னர் interaction section ல் side icon menu களில் மேலிருந்து கீழே 3 வதாக இருக்கும் create constraint என்ற icon ஐ கிளிக் செய்ய வேண்டும்.

ds simulia abaqus

create constraint என்ற icon ஐ கிளிக் செய்தவுடன் புதியதாக tab ஒன்று உருவாகும்.அந்த புதிய tab ல் rigid body ஐ select செய்து continue வை கிளிக் செய்ய வேண்டும்.continue வை கிளிக் செய்தவுடன் உருவாகும் புதிய tab ல் body (elements )ஐ select செய்துவைத்துக்கொண்டு அதன் அருகில் உள்ள cursor போன்ற icon ஐ click செய்யவேண்டும்.cursor போன்ற icon ஐ click செய்தவுடன் rigid part க்கான part ஐ கிளிக் செய்து done கொடுக்கவேண்டும்.அதன்பின்னர் அந்த tab ல் உள்ள reference point க்கு அருகில் உள்ள cursor போன்ற icon ஐ click செய்யவேண்டும்.

பின்னர் main page ல் corner பகுதியில் உருவாகும் set என்ற menu வை கிளிக் செய்ய வேண்டும்.set menu வை click செய்தவுடன் reference point க்கான நாம் கொடுத்த name set ஆனது புதிய tab ல் தோன்றும்.அந்த name set ஐ click செய்து continue கொடுக்கவேண்டும்.இப்போது மீண்டும் உருவாகும் பழைய tab இல் ok வை click செய்தால் நமக்கான rigid part உருவாகிவிடும்.இந்த முறையில் உருவாக்கப்படும் rigid part க்கு பொருட்பண்புகள் கொடுக்கப்படுவதால் இந்தவகை rigid part ஆனது ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.rigid part ஐ பயன்படுத்துவதால் analysis க்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறையும்.

Comments