How to get step by step frame view in abaqus

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

uvarm abaqus

hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் கிடைக்கும் results ஐ எவ்வாறு frame by frame ல் பார்ப்பதென்று பார்ப்போம்.நாம் சில சந்தர்ப்பங்களில் abaqus software ல் பணியாற்றிய simulation ஆனது நிறைவு பெற அதிக நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் உருவாக்கிய simulation ஆனது சரியான இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள step by step frame view ஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு நாம் தெரிந்து கொள்ளும்போது நாம் உருவாக்கிய simulation ஆனது தவறான இலக்கை நோக்கி நகர்ந்தால் உடனே அதற்கு தேவையான மாற்றங்களை செய்து மீண்டும் சோதனையை தொடரலாம்.இதனால் பெருமளவு நேரம் சேமிக்கப்படும்.


இந்த செயல்முறையை செய்வதற்கு நாம் உருவாக்கி simulation ஐ submit கொடுத்து ஒருசில வினாடிகள் run ஆகியதை monitor ல் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு நாம் உருவாக்கிய simulation ஒருசில வினாடிகள் run ஆகிய உடன் result menu வை கிளிக் செய்து visualization page வரவேண்டும்.இங்கு plot contours on deformed shape என்ற icon ஐ கிளிக் செய்யவேண்டும்.இப்போது visualization page ல் top menu bar ல் உள்ள result என்ற menu வை கிளிக் செய்யவேண்டும்(result >step/frame>apply).இப்போது result menu வுக்கு கீழே புதியதாக சிறிய tap ஓன்று உருவாகும் அந்த புதிய tab ல் முதலில் உள்ள step /frame என்ற menu வை கிளிக் செய்யவேண்டும்.இதனால் உருவாகும் புதிய tab ல் இதுவரைக்கும் உள்ள result ன் நிலை காட்டும்.இந்த புதிய tab ல் தேவையான frame ஐ select செய்துகொண்டு apply கொடுத்து result ன் அந்த நிலையை காணலாம்.

Comments