How to import cad file to abaqus

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

solidworks simulia

hi abaqus students.நாம் இந்த பதிவில் catia ,solidworks போன்ற cad software களில் உருவாக்கி cad file ஐ abaqus software ல் import செய்வது பற்றி பார்ப்போம்.நாம் Abaqus software இல் பணியாற்றும்போது சிலசந்தர்பங்களில் மிக கடினமான வடிவமைப்பை உருவாக்கவேண்டிருக்கும்.உதாரணமாக helmet போன்ற வடிவமைப்பை Abaqus software இல் உருவாக்குவதென்பது எளிதான காரியமல்ல.ஏனென்றால் Abaqus software இல் வரைவதெற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் டூலின் எண்ணிக்கை குறைவு.இதுபோன்ற சமயங்களில் நாம் அந்த கடினமான வடிவமைப்பை வேறு ஏதேனும் cad software ஐ பயன்படுத்தி உருவாக்கிக்கொண்டு அதை நாம் Abaqus software இல் import செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதாவது catia software இல் நாம் ஒரு cad model ஐ உருவாக்கிய பின் catia வின் top menu bar இல் file என்ற menu வை கிளிக் செய்ய வேண்டும்.அந்த file menu விலிருந்து புதிதாக ஒரு tab உருவாகும்.அந்த tab இல் save as என்ற menu வை கிளிக் செய்ய வேண்டும்.save as ஐ கிளிக் செய்தவுடன் புதிதாக save செய்வதற்கான tab உருவாகும்.அதில் நாம் உருவாக்கிய cad model எந்த folder ல்(left சைடு) save ஆக வேண்டும் என்பதை select செய்யவேண்டும்.நாம் தேர்ந்தெடுத்த folder இல் தான் இது save ஆகும் என்பதை உறுதிபத்திக்கொள்ள இந்த tab இன் மேல் அடுக்கில் this pc >local disk >your selected folder name அதாவது இறுதியாக நீங்கள் தேர்ந்தெடுத்த folder name இருக்கும்.அதன்பின்னர் அந்த tab ன் அடிப்பகுதியில் file name கேட்டிருக்கும்.file name என்பது நீங்கள் உருவாக்கிய cad model ன் பெயர் எனலாம்.இந்த box ல் உங்களது cad model க்கு உகந்த ஏதேனும் ஒரு பெயரை கொடுக்க வேண்டும்.அடுத்தகட்டமாக save as type என்ற box இல் கிளிக் செய்து CATPart என்பதிலிருந்து igs என்ற format க்கு மாற்றி save கொடுக்க வேண்டும்.

இதுபோலவே solidworks software ல் நாம் உருவாக்கிய cad model ஐ igs format save செய்ய வேண்டும்.அதற்கு cad model ஐ solidworks ல் உருவாக்கிய பின் cursor ஐ solidworks ன் top menu(left side black arrow mark)வை நோக்கி நகர்த்தினாள் file என்ற menu வானது உருவாகும்.அதில் save as என்ற menu வை கிளிக் செய்யவேண்டும்.அல்லது top menu விலேயே நான்காவதாக இருக்கும் save என்ற icon ஐ கிளிக் செய்தால் save as என்ற menu உருவாகும்.இந்த save as menu வை கிளிக் செய்தால் நமக்கு புதிதாக tab ஓன்று உருவாகும். அதில் நாம் உருவாக்கிய cad model எந்த folder ல்(left சைடு) save ஆக வேண்டும் என்பதை select செய்யவேண்டும்.நாம் தேர்ந்தெடுத்த folder இல் தான் இது save ஆகும் என்பதை உறுதிபத்திக்கொள்ள இந்த tab இன் மேல் அடுக்கில் this pc >local disk >your selected folder name அதாவது இறுதியாக நீங்கள் தேர்ந்தெடுத்த folder name இருக்கும்.அதன்பின்னர் அந்த tab ன் அடிப்பகுதியில் file name கேட்டிருக்கும்.file name என்பது நீங்கள் உருவாக்கிய cad model ன் பெயர் எனலாம்.இந்த box ல் உங்களது cad model க்கு உகந்த ஏதேனும் ஒரு பெயரை கொடுக்க வேண்டும்.அடுத்தகட்டமாக save as type என்ற box இல் கிளிக் செய்து SOLIDWORKS Part(*.prt;*.sldpart) என்பதிலிருந்து IGES(*.igs) என்ற format க்கு மாற்றி save கொடுக்க வேண்டும்.

இப்பொழுது igs format ல் save செய்த cad model ஐ abaqus software ல் import செய்வதைப்பற்றி பார்ப்போம்.abaqus software ஐ open செய்தவுடன் abaqus software top menu வில் உள்ள file என்ற menu வை கிளிக் செய்ய வேண்டும்.இதனால் file menu வுக்கு கீழ் புதிதாக tab ஆனது உருவாகும்.அந்த tab ல் மேலிருந்து கீழாக பன்னிரண்டாவது இடத்தில் இருக்கும் import என்ற menu விற்கு cursor ஐ நகர்த்தி part என்ற மனுவை கிளிக் செய்யவேண்டும் (file >import >part).அவ்வாறு கிளிக் செய்வதால் புதியதாக tab ஒன்று உருவாகும்.அந்த tab ல் directory box ஐ கிளிக் செய்து நாம் முன்னர் igs format ல் save செய்த cad model இருக்கும் folder ஐ select செய்ய வேண்டும்.அதன் பின்னர் இந்த tab ன் அடிப்பகுதியில் இருக்கும் file filter box ஐ கிளிக் செய்து igs format ஐ select செய்யவேண்டும்.இவ்வாறு select செய்தவுடன் நாம் உருவாக்கிய cad madel ஆனது visible ஆகும்.

இப்பொழுது நாம் உருவாக்கிய cad madel ஐ select செய்து ok கொடுக்க வேண்டும்.அதன் பின் புதிதாக உருவாகும் tab ல் ok கொடுத்தால் cad madel ஆனது import ஆகும்.

இதுபோலாவே மற்று சில cad madel format களை import செய்யலாம்.

அவை:

step

CATPart

போன்றவை.

ஆனால் இவற்றை import செய்யும் பொது அவை பல கூறுகளாக பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இது போன்று பல கூறுகளாக பிரிவதை தவிர்க்க import க்கு ok கொடுத்தவுடன் உருவாகும் புதிய tab இல் part filter இல் இருக்கும் combine into single part என்பதை tick செய்யவேண்டும்.மேலும் அதன் கீழ் உள்ள இரண்டு டிக் box ஐயும் டிக் செய்து ok கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் step,CATPart format ல் இருக்கும் cad model ஆனது single part ஆக import ஆகும்.

cad software ஐ பயன்படுத்தி உருவாக்கிய cad madel units ஆனது பெரும்பான்மையாக mm அலகில் இருக்கும்.இந்த cad model ஐ mm மிலிருந்து meter க்கு மற்ற நினைத்தால் அந்த(model >parts >cad model) cad model ஐ right கிளிக் செய்து copy option ஐ கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு கிளிக் செய்வதால் உருவாகும் புது tab இல் scale part by என்ற டிக் box கிளிக் செய்து அந்த box ல் 0.001 (1mm=0.001m) என கொடுத்து ok கொடுக்க வேண்டும்.இதனால் cad model ஆனது mm மிலிருந்து meter க்கு மாற்றப்படும்.இவ்வாறு copy செய்யப்பட்ட cad model ஐ அனாலிசிஸ் க்கு பயன்படுத்தவேண்டும்.

இந்த முறையை மற்ற பிற cad software களான zbrush ,autodesk maya,autocad ,blender etc ...போன்ற software களில் cad model களை உருவாக்கி அதை igs format டிலோ step format டிலோ save செய்து அதை abaqus software இல் import செய்து பயன்படுத்தலாம்.

Comments