How to remove part in abaqus

தமிழ் பேசும் நண்பர்களுக்கு எனது வணக்கங்கள்.

tuto abaqus

hi abaqus students.நாம் இந்த பதிவில் abaqus software ல் நாம் உருவாக்கிய parts ஐ எவ்வாறு remove மற்றும் add செய்வதென்று பார்ப்போம்.நாம் abaqus software ல் பணியாறிக்கொண்டிருக்கும்போது interaction section ல் மிகவும் நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு surface to surface contact கொடுக்க வேண்டியிருக்கும்.அல்லது simulation work ல் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட parts ஆனது பயன்படுத்தப்பட்டிருந்தால் அதில் குறிப்பிட்ட ஒரு பொருளின் result ஐ மட்டும் பெறவிரும்பினால் மற்ற பிற பொருட்களை remove செய்யவேண்டும்.இதுபோன்ற சூழ்நிலைகளில் parts remove,add option பயனுள்ளதாக இருக்கும்.

நாம் இதற்கு முதலில் display group icons ஐ enable செய்யவேண்டும்.அதற்கு top menu bar ல் உள்ள view menu வை கிளிக் செய்யவேண்டும்.view menu வை கிளிக் செய்தவுடன் view menu வுக்கு கீழே புதிய tab ஒன்று உருவாகும் அதில் toolbar menu வை நோக்கி cursor ஐ நகர்த்தி display group menu வை கிளிக் செய்யவேண்டும்.display group menu வை கிளிக் செய்தவுடன் main page ல் புதியதாக display group க்கான icons தோன்றும்.

இந்த icons ல் ஏழாவதாக இருக்கும் create display group என்ற icon ஐ கிளிக் செய்யவேண்டும்.இந்த icon ஐ கிளிக் செய்தவுடன் புதியதாக tab ஒன்று உருவாகும்.இந்த புதிய tab ல் item box ல் இருக்கும் part instance ஐ select செய்யவேண்டும்.அதன்பின்னர் remove செய்யவேண்டிய part ஐ இந்த tab ல் கிளிக் செய்து tab அடிப்பகுதியில் உள்ள remove icon ஐ கிளிக் செய்தால் அந்த part ஆனது remove ஆகும் மற்றும் add icon ஐ click செய்தால் remove ஆன part ஆனது மீண்டும் add ஆகும்.

Comments